வெட்கக்கேடு
நாற்காலிகளை சுத்தம் செய்யச் சொல்லி, கால்பந்தாட்ட சாம்பியன்களை அவமதித்திருக்கிறது மத்தியப் பிரதேச கிரிக்கெட் சம்மேளனம்
உலகக் கோப்பையை வென்ற ஓர் அணி, வெற்றி பெற்று சில மணி நேரங்களிலேயே கையில் கோப்பையை வைத்துக்கொண்டு நடுரோட்டில் நிற்கிற கொடுமையெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும். சென்ற மாதம் உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய கபடி அணிக்குத்தான் இந்த நிலைமை. மாலை மரியாதை வேண்டாம்... பெரிய விழாக்கள் கூட வேண்டாம்... அட, ஒரு வாடகை கார் பிடித்து வீட்டிற்கு வழியனுப்பியிருக்க வேண்டாமா?
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கு பயணத்துக்கான அலவன்ஸைக்கூட ஒழுங்காகக் கொடுக்காமல், அலையவிட்டு அவமதித்துள்ளது இந்திய விளையாட்டுத்துறை. இது போதாதென்று, வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களுக்கு பில் கட்டவில்லையென ரூமை காலி செய்யும்போது வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு பல மணிநேரம் ரிசப்ஷனிலேயே காத்திருக்க வைக்கப்பட்டு, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
கபடி வீரர்களுக்கு நேர்ந்த அவமரியாதை ஆறுவதற்குள் அடுத்ததாக இந்திய கால்பந்தாட்ட வீரர்களுக்கு நேர்ந்திருக்கிற அவலம் மேலும் அதிர்ச்சியூட்டுகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறது. டிசம்பர் 8ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் ஒரு நாள்போட்டியொன்றில் ஆடவுள்ளது. அதற்காக ஹோல்கர் மைதானம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அங்கேயுள்ள ஒவ்வொரு நாற்காலியும் பாதைகளும் தண்ணீர் ஊற்றி கழுவப்படுகின்றன. நல்லதுதானே என நினைக்கலாம்.
அதற்காகப் பயன்படுத்தப்பட்ட துப்புரவு ஊழியர்கள் யார் தெரியுமா? சென்ற வாரம் மத்தியப்பிரதேசத்தில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஆனந்த் லெவன் என்னும் கால்பந்தாட்ட அணி வீரர்கள்! அதில் ஆறு பேர், மத்தியப்பிரதேசக் கால்பந்தாட்ட அணிக்காக விளையாடுகிற முன்னணி வீரர்கள் என்பது அதிர வைக்கும் தகவல்.
26,000 சீட்டுகள் கொண்ட மைதானத்தின் ஒவ்வொரு நாற்காலியையும் சுத்தம் செய்ய கொடுக்கப்படும் தொகை, வெறும் இரண்டு ரூபாய் 75 காசுகள்! இந்த சொற்ப வருமானத்திற்காக கையில் பக்கெட்டோடு, துணி கொண்டு ஒவ்வொரு நாற்காலியாகத் துடைத்து சுத்தம் செய்யும் அந்த இளம் கால்பந்தாட்ட வீரர்களைப் பார்த்து கால்பந்தாட்ட ரசிகர்கள் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் அண்மையில் அரங்கேறிய உதாரணங்கள்தான். இந்தியா முழுக்கவே வெவ்வேறு விளையாட்டு வீரர்களும் படுகிற அவமானங்களும், வேதனைகளும் ஏராளமானவை. சொல்லி மாளாது.
அந்த வீரர்களிடம் விசாரித்துப் பார்த்தால் வேதனையில் விம்முகிறது நெஞ்சு. "எங்களுக்கு இந்தத் தொகை கிடைச்சா, ரொம்ப உதவியா இருக்கும்னு நினைச்சோம். ஃபுட்பாலுக்கு யாரும் பெரிசா பண உதவிகள் செய்யறதில்ல. இதுமாதிரி எந்த வேலையா இருந்தாலும் செஞ்சுதான் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கு. அதைவச்சு கிழிஞ்சுபோன ஷூவை தூக்கிப்போட்டுட்டு புதுசா இரண்டு செட்டு ஷூ வாங்கணும், அதோட, பயிற்சிக்குத் தேவையான பொருட்களையும் வாங்கவும் பணம் தேவைப்பட்டதாலதான் இதை செய்யறோம்" என்று தங்களுடைய வறுமையை நாசூக்காக பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கிறார், அந்த அணியின் பயிற்சியாளர் சஞ்சய் நிதான்.
இவர்களுக்கு இந்த வாய்ப்பை பிழைத்துப்போகட்டும் என பெருந்தன்மையோடு வழங்கியிக்கிறது, மத்தியப் பிரதேச கிரிக்கெட் சம்மேளனம். வெட்கக்கேடு! இது அந்த அணியினரைக் கேவலப்படுத்தும் செயல் மட்டும் அல்ல, ஒட்டு மொத்தக் கால்பந்தாட்டத்தையே கேலிக்குள்ளாக்கும் செயல்.
இந்தியாவில் மட்டும்தான் கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளைத் தேர்ந்தெடுக்கிற ஒவ்வொரு விளையாட்டு வீரரும், வீராங்கனையும் அவமதிக்கப்படுவதும், வெற்றிகளைக் குவித்தாலும் அரசு வேலைக்காக அலைந்து திரிவதும், பயணச் செலவுக்கான தொகைக்காக விளையாட்டுத்துறையின் அலுவலகங்களில் காத்துக் கிடப்பதுமான கொடுமைகள் நடக்கும்.
தங்களுடைய அடிப்படைத் தேவைகளான காலணிகளைக்கூட, வளரும் கால்பந்தாட்ட வீரர்களுக்கு கொடுத்து உதவ முடியாத விளையாட்டுத்துறையை வைத்துக்கொண்டுதான் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோம்... கால்பந்தில் உலகக் கோப்பையை வெல்வோம் என்றெல்லாம் கனவு காணுகிறோம். தேசிய விளையாட்டான ஹாக்கியை டம்மியாக்கி, மூலையில் உட்கார வைத்தாகிவிட்டது. இன்னமும் மிச்சமிருக்கிற சில விளையாட்டுகளையும் இதுபோல கேவலப்படுத்தி போதிய உதவிகள் செய்யாமல், வளர விடாமல் தடுத்து, கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டு என்கிற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.
உலகம் முழுக்க போற்றிக் கொண்டாடப்படும் ஒரு விளையாட்டென்றால், அது கால்பந்தாட்டம்தான். ஏனோ,இந்தியா மட்டும் கால்பந்தாட்டத்தில் கத்துக்குட்டியாகவே பல ஆண்டுகளாக நீடிக்கிறது. காரணம், போதிய மைதானங்கள் இல்லை, பயிற்சியாளர்கள் இல்லை, உபகரணங்கள் இல்லை என்றெல்லாம் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அதற்கெல்லாம்மேல் அரசின்அக்கறையின்மையே பிரதானமாக இருக்கிறது.
’சச்சின் தெண்டுல்கர் தன் நூறாவது சதத்தை அடித்தால், நூறு தங்கக் காசுகளால் குளிப்பாட்டுவோம்’ என மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவிக்கிறது. ஆனால், காலணி வாங்கவே காசில்லாமல் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யவிட்டிருக்கிறோம் கால்பந்தாட்ட வீரர்களை! கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்றதும் கோடிகளைக் கொட்டி, பரிசு மழையில் நனைய விட்டோம். ஜனாதிபதியே வீரர்களை அழைத்து விருந்து வைக்கிறார். ஆனால், கபடியில் உலக கோப்பையை வென்ற அணியை சீந்த ஆளில்லை! மாற்று சீருடையைக் கூட சொந்தக் காசில் வாங்கிவேண்டிய சோக நிலை.
கால்பந்தாட்ட வீரர்களை நாற்காலிகளை சுத்தம் செய்யச் சொல்ல மத்தியப்பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் இந்தச் செயலை பி.சி.சி.ஐ. கடுமையாக கண்டிக்கவேண்டும். கோடிக்கணக்கில் கிரிக்கெட்டுக்கு கொட்டிக்கொடுக்கும் இதே மத்திய அரசு... கபடி, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் கோப்பைகளை வெல்லும் வீரர்களை மட்டும் எட்டி உதைப்பது வெட்கக்கேடு!

0 comments:
Post a Comment