இன்பாக்ஸ்


உண்மையிலும் உண்மை:
‘இக்கணம் தேவை சிக்கனம்’ என்கிற ஆசிரியரின் தலையங்கக் கருத்துப்படி இலவசம் என்ற பெயரில் மிட்டாய் கொடுத்துவிட்டு, சேமிப்பு என்கிற தங்கச் செயினை கழற்றிக்கொள்ள முயல்கிறது அரசு என்பது நூறு சதவிகித உண்மையே. இது ஒருவிதமான பகல் கொள்ளையே.


சரியான சவுக்கடி:
‘இலவசத்தின் விலை இதுதான்!’ கவர் ஸ்டோரி, அரசியல்வாதிகளுக்கு சரியான சவுக்கடி. என் போன்ற புதிய வாசகர்களுக்கு பல விஷயங்களை விளக்கமாக சொல்லியிருந்தது அற்புதம்.


தேவை மாற்று வழி:
பலவிதமான பொருட்களை ஓசியில் தருவதை விட, அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு வருமானம் ஈட்ட அரசு வழி செய்யலாம். சுய வேலை வாய்ப்புகள், சிறு தொழில்கள், சுய உதவிக் குழுக்கள் மூலம் வியாபார வாய்ப்புகள், இவற்றை பலப்படுத்தும் வகையில் வங்கிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடன் உதவி, அந்தக் கடன்களுக்கு வட்டியை அரசே ஏற்பது போன்ற நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும்.


புறக்கணிப்போம் இலவசத்தை:
இலவசத்தின் விலையை கவர் ஸ்டோரி மூலம் மாலன் அவர்கள் 360 டிகிரியில் அலசியிருந்தது அருமை. இலவசம் என்பதை இனியாவது புறக்கணிப்பது, நாட்டிற்கு நாம் செய்யும் தலையாயக் கடமை.
அ.அறிவொளி, மேச்சேரி


உணர வைத்த பாராட்டு:
சிறு வயதில் விளையாட்டும், குறும்புத்தனமும் மிக்க மதனுக்கு, அவரைச் சுற்றியிருந்தோர் அவரது ஓவியத்தைப் பாராட்டியதுதான் அவரை மிகச் சிறந்த கார்ட்டூனிஸ்ட்டாக மாற்றியிருக்கிறது என்பதை அறியும்போது, குழந்தைகளைப் பாராட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை நன்கு உணர முடிந்தது.


இங்கேயும் வேண்டும்:
மகாராஷ்டிராவின் அம்போலி பகுதியில் ஈவ்டீசிங்கிற்கு எதிரான சட்டத்தை செயல்படுத்தும் முறையை தமிழ்நாட்டிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தினால் பல பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.


பாடமாகும் சம்பவங்கள்:
பிரபஞ்சன் அவர்களின் தொடரில் ’வன புஷ்பம்’ படித்தேன். அதில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் நிலை தடுமாற நினைப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு பாடமாக அமையும் என்பது உறுதி.

Share on :

0 comments:

Post a Comment

 
© Copyright Puthiya Seithigal 2011 - Some rights reserved | Powered by Blogger.com.
Template Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates and Theme4all