நதியோடு விளையாடி

                                                நதியோடு விளையாடி



நதியில் படகோட்டுதல் என்பது சிலிர்ப்பூட்டும் ஓர் அனுபவம். இந்தியாவில் white water rafting விளையாட்டுகள் பல இடங்களில் நடைபெறுகின்றன. வெண்மை நுரை பொங்க... வேகமாக ஓடும் நீரில் படகோட்டிச்செல்வதால் இவ்விளையாட்டு ஒயிட் வாட்டர் ராஃப்டிங் என்று அழைக்கப்படுகிறது.


ராஃப்டிங் போகும்பொழுது நதியின் வேகத்திற்கேற்ப மற்றும் திசைக்கேற்ப நாம் படகை ஓட்டிச் செல்லவேண்டும். ஒரு படகை பத்து பேர் வரை (படகு கொள்ளும் அளவிற்கு) ஓட்டிச் செல்லலாம். அதற்கு அடிப்படையாக துடுப்புகளின் உதவியுடன் படகோட்டத் தெரிந்திருக்க வேண்டும். நதியில் ஆபத்தான பாறைகள் உண்டு. இதனால், படகு கவிழவும் செய்யும். படகை நீரின் ஆழம் அறிந்து, தடைகளை எதிர்த்து ஓட்டிச் செல்லவேண்டும். அடிப்படையாக நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.


இந்தியாவில் நதிகளில் நீர் வேகம் அதிகமான காலங்களிலேயே இவ்விளையாட்டு நடைபெறுகிறது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை மற்றும் மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்கள் ராஃப்டிங் செய்ய ஏதுவான காலம். இதற்குத் தேவையான பொருட்களும், பயணிப்பதற்கு தேவையான பயிற்சிகளும்பெரும்பாலும் நாம் ராஃப்டிங் செல்லும் இடத்திலேயே வழங்கப்படுகின்றன.


காகிலஸ் (goggles) என்ற ஆன்டிசெப்டிக் கிரீம் ( பூச்சிக்கடிகள், பாறைகளால் உருவாகும் சிராய்ப்புகள் போன்றவற்றில் இருந்து காக்க)தலையில் ஹெல்மெட், லைஃப் ஜாக்கெட் ஆகியவை இவ்விளையாட்டுக்குத் தேவையான முக்கியப் பொருட்கள்.


காயாகிங் (Kayaking) என்னும் விளையாட்டு ரிவர் ராஃப்டிங்கைப் போன்றதுதான். ஆனால், இதில் ஒரு படகில் ஒருவர் மட்டுமே உட்கார முடியும். தனியாக படகோட்டுவதால் முறையான பயிற்சியும், மனோதிடமும் மிகவும் முக்கியம்.


இந்தியாவில் அலாக்நன்தா, பியாஸ், பாகீரதி, பிரம்மபுத்ரா, கங்கை, சிந்து, கங்க டீஸ்டா நதி, ஸ்பிடி ஆகிய நதிகள் ராஃப்டிங் விளையாட்டுக்களுக்கு பிரசித்திப் பெற்றவை. அஸ்ஸாம், மணாலி, ரிஷிகேஷ்,லடாக், குமோன் போன்ற இடங்களில் ராஃப்டிங் விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன.


சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தார்ஷா நீர் விளையாட்டரங்கத்தில் ராப்டிங், காயாகிங் போன்ற பல நீர் விளையாட்டுக்கள் கற்றுத்தரப்படுகின்றன.
Share on :

0 comments:

Post a Comment

 
© Copyright Puthiya Seithigal 2011 - Some rights reserved | Powered by Blogger.com.
Template Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates and Theme4all